‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நிரம்பி வழியும் நட்சத்திர பட்டாளம் – த்ரிஷாவும் இணைகிறார் !

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். மேலும் ஐஸ்வர்யாராய் மற்றும் ஜெயராம் ஆகியோரும் இணைய உள்ளனர் ஆனால் எந்த கதாபாத்திரம் என முடிவாகவில்லை. இதற்கிடையில் த்ரிஷாவும் இப்படத்தில்  இணைய உள்ளார், இதுகுறித்து படக்குழுவினர் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படம் நட்சத்திரங்களால் நிரம்பிவழிகிறது.