பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்தினம் எஸ்.எஸ். ராஜமௌலி சந்திப்பு !

சுமார் 900 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன்  படத்தில் தினமும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. போர் காட்சிகள் மற்றும் அரச சபை காட்சிகள் ஆகிய காட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் தேவை. இந்த நிலையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து பாகுபலி, பாகுபலி 2, ஆகிய இரண்டு வெற்றி படங்களை இயக்கிய பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியை மணிரத்னம் சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் அனுப்பிய குழு ஒன்று, எஸ்எஸ் ராஜமவுலியை சந்தித்து ஆலோசனை செய்து இருப்பதாகவும், விரைவில் மணிரத்னம் – ராஜமௌலி சந்திப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. எனவே பொன்னியின் செல்வன் உருவாக்கத்தில் ராஜமௌலியின் பங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.