பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிய சத்தியராஜ் !

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகி இருந்தார். பாகுபலி கட்டப்பா கேரக்டர் போல் இதில் அவரது வேடம் பேசப்படும் என கூறப்பட்டது. இந்த படத்தில் தொடர்ந்து 6 மாதம் நடிக்க வேண்டும், அதற்கிடையே வேறு எந்த படமும் நடிக்க கூடாது என நடிகர், நடிகைகளுக்கு நிபந்தனை போடப்பட்டுள்ளது. இந்த கண்டிஷனால் சத்யராஜ் அப்செட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்தபடி மேலும் 2 படங்களில் நடிக்க அவர் ஏற்கனவே கால்ஷீட் ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. எனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க முடியாது என அவர் விலகியுள்ளார்.