பொன்னியின் செல்வன் படத்திற்காக மொட்டை அடிக்கும் ஜெயம் ரவி !

பொன்னியின் செல்வன் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் உருவாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். தன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்கள் எல்லோரும் தலைமுடியை வளர்க்கவும், வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகளை கற்றுக்கொள்ளவும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக ஜெயம் ரவி மொட்டை அடிக்க இருக்கிறாராம். எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்திற்காக சிரமேற்கொண்டு நடிப்பதில் சிறந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஜெயம் ரவி.