பொள்ளாச்சி சம்பவம், மக்கள் கருத்தே என் கருத்து – இசைஞானி இளையராஜா!

தமிழ் திரையுலகில் இசை சக்ரவர்த்தியாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரது 75 வது பிறந்தநாளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடியது. இசைஞானியை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த நாள் விழாவை கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா கொண்டாடி வருகிறார். சமீபத்தில் சென்னையில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகளிடையே பாடல்கள் பாடி அசத்தினார். நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த இசைஞானி இளையராஜா, பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவம் குறித்து பத்திரிகையாளர் கேள்விக்கு, தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்னவோ நானும் அப்படித்தான் இருக்கிறேன். தவறு செய்தவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.