போனி கபூர்: அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்…

அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் “விசுவாசம்” படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ் திரையுலகம் வேலை நிறுத்தத்தால் துவங்குவதால் இந்த படம் தொடங்கம் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்த படத்திற்கு பிறகு அவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். “இங்கிலிஷ் விங்கிலீஷ்” படத்தின் மூலம் ஸ்ரீதேவிக்கு அவருக்கும் நல்ல நட்பு இருந்ததால், அவரின் அஞ்சலி கூட்டத்தில் அவரும் ,ஷாலினி இருவரும் போனிகபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் இந்த சந்திப்பில் போதே படம் தொடர்பான விஷயங்களை விவாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது