போனி கபூர் தயாரிக்கும் ரீமேக் படத்தில் தனுஷிற்கு வாய்ப்பு

அஜித்குமார்-வித்யாபாலன் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் தயாராகி வெளிவந்துள்ளது. இப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி நடித்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படம். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கிய இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் போனிகபூர் மேலும் 2 இந்தி படங்களை தமிழில் ‘ரீமேக்’ செய்ய திட்டமிட்டு உள்ளார். இதற்காக இந்தியில் வெற்றி பெற்ற ‘ஆர்டிகிள் 15,’ ‘பதாய் ஹோ’ ஆகிய படங்களின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ளார். ‘ஆர்டிகிள் 15’ படத்தில் ஆயுஷ்மன் குர்ரானா, இஷா தல்வார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்க தனுஷ் ஏற்கனவே விருப்பம் தெரிவித்து இருந்தார். எனவே அவர் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.