போர்ப்பஸ் பத்திரிகையின் கருத்துக்கணிப்பு – இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் வரிசையில் ரஜினி, கமல், விஜய், அஜித் !

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்பஸ் பத்திரிகை, 2019 -ம் ஆண்டின் இந்தியாவின் டாப் 10 பிரபலங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அக்டோபர் 2018 முதல் 2019 வரை ஈட்டிய வருமானம், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்களுக்கு கிடைத்த புகழ் இவைகளை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். தென்னிந்தியாவில் ரஜினி 13 வது இடத்திலும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் 16 வது இடத்திலும், விஜய் 47 வது இடத்திலும், அஜித் 52 வது இடத்திலும், கமல்ஹாசன் 56 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.