போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கும் ஷ்ரதா ஸ்ரீநாத் !

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சக்ரா என்னும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் கதையை விஷாலிடம் சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த படத்தை நானே தயாரித்து நானே நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். கதாபாத்திரங்கள் எதையும் மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். அதேபோல் ரெஜினா கசன்ட்ரா, ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இவர்களுடன் கே.ஆர்.விஜயா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதி இருக்கிறார். பாலசுப்பிரமணியம், ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை மே 1-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.