போலீஸ் கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி !

ராஜபார்வை எனும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்திருந்தால், நிச்சயம் நான் போலீஸ் அதிகாரியாக தான் இருந்திருப்பேன். எனது வேலையை நான் நேசிக்கிறேன். எனக்கு பல்வேறு கதாபாத்திரங்கள் தரும் எனது இயக்குனர்களுக்கு நன்றி. அதனை ஏற்றுக்கொள்ளும் எனது ரசிகர்களுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னை நீங்கள் மேலும் சிறப்பானவளாக உயர வைக்கிறீர்கள், என வரலட்சுமி கூறினார்.