போலீஸ் வேடத்தில் நடிக்கும்ரஜினிகாந்த் !

பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா வருகிறார். இதன் படப் பிடிப்பு வருகிற 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல்நாளில் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்கினர். மூன்று மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில் வருகிற 18-ந் தேதி மட்டும் ரஜினிகாந்த் சென்னை வந்து தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு போலீஸ் உடை அணிவித்து புகைப்படம் எடுத்தனர். புகைப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கிறார். யாரோ ரஜினிகாந்தின் போலீஸ் அதிகாரி தோற்றத்தை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் கசியவிட்டுள்ளனர்.