போலீஸ் வேலை வேண்டாமென்று கூறிய ஒளிப்பதிவாளர்!

தமிழில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர், ஆனந்த் குமார். அவர் கூறுகையில், ‘ஜாக்பாட் படப்பிடிப்பை 35 நாட்களிலேயே முடித்துவிட்டேன். இந்த வேகத்தையும், சுறுசுறுப்பையும் எனது குரு ரவிவர்மனிடம் இருந்து கற்றுக்கொண்டேன். தவிர, இந்தி படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளேன். என் வீட்டில் நான் போலீசாக விரும்பினார்கள். ஆனால், சினிமா ஆர்வம் காரணமாக ராஜீவ் மேனன் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு கற்றுக் கொண்டேன். ஒளிப்பதிவில் தனித்துவம் காட்டுவதே எனது நோக்கம்’ என்றார்.