மகளின் மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி குடும்பத்தார் தரிசனம் !

ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யாவின் மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி,லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் தரிசனம் செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. திருமண அழைப்பிதழை ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை செய்து பின்னர் பெற்றுக் கொண்டனர்,அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பிறகு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் இரவு தங்கி ஓய்வு எடுத்தனர்.