மகாமுனி ஆர்யா முதன் முறையாக எடுக்கும் ரிஸ்க்

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர் படங்களுக்கு தான் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் தற்போது ஆர்யா நடித்து வரும் மகாமுனி படத்தை இவர் இயக்கியுள்ளார், இப்படத்தில் இந்துஜா, மஹிமா ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்யா தன் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுப்பட்ட இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது. அதாவது அதிகம் பேசாத ஒரு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும் எனவும் கூறப்படுகின்றது.