மகாமுனி திரைப்படம் செப்டம்பர் வெளியீடு – படக்குழுவினர் அறிவிப்பு !

'கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'மகாமுனி’. சாந்தகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருப்பதால் இப்படம் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.