மகேஷ்பாபுவின் உதவி.

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மற்றும் அவரது மனைவி நம்ரதாவும் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க பணவசதி இல்லாமல் கஷ்டப்படும் தகவல் அறிந்தால் உடனடியாக உதவி செய்து அவர்களை நோயில் இருந்து காப்பாற்றி வருவதை வழக்கமாக கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தனிஷ் என்ற ஏழை சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்த அவர் சிகிச்சைக்கு தேவையான பண உதவி செய்து அந்த சிறுவனை காப்பாற்றினார்.இதனால் அந்த சிறுவனின் குடும்பத்தார் அவரை சந்தித்து நன்றி தெரிவித்து இந்த தகவலை ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.