மகேஷ்பாபுவின் பரந்த மனது…

நடிகர் மகேஷ்பாபு தான் சம்பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்கும், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கும் உதவி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சில கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறார். இதில் அவர் மட்டுமின்றி அவரது மனைவி நம்ரதாவும் இணைந்து செயல்படுகிறார். தற்போது பிப்ரவரி 10 தேதி தனது 13 வது  திருமண நாளை ஐதராபாத்தில் உள்ள தேவ்னர் என்ற பள்ளியில் பயிலும் 600 கண் பார்வை அற்ற பிள்ளைகளுக்கு உணவு அளித்து, அவர்களுடன் இணைந்து கேட் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.