மக்களை மகிழ்விக்கத் தான் இருக்கின்றோம், வன்மம் வேண்டாமே – வெங்கட் பிரபு !

வடிவேலுவின் அகந்தை பேச்சுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து வெங்கட் பிரபுவும் கண்டனம்
தெரிவித்துள்ளார். எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன். ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், 'டைரக்டர் சொதப்பிட்டான்பா' இது தான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது ஒரு ஆகச் சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப் பெரிய வெற்றியைத் தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை தரக்குறைவாகப் பேசியது என்னை மனமுடையச் செய்தது என்கிறார் வெங்கட் பிரபு. எல்லோருமே இங்கு மக்களை மகிழ்விக்கத் தான் இருக்கின்றோம். இதில் வன்மம் வேண்டாமே அன்பை மட்டும் வளர்ப்போம் ஏணியில் ஏற்றிவிட்டவர்களை மறக்க வேண்டாம் என்று வடிவேலுக்கு உரைக்கச்செய்தார் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.