மஞ்சு வாரியரை பாராட்டினார் கமல்ஹாசன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அண்மையில் வெளியான அசுரன் படத்தில் அனைவரின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது, என்றாலும் மலையாள நடிகை மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் பெரும் கவனத்துக்கு உட்பட்டு ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. தனுஷ் மனைவியாக பச்சையம்மாள் எனும் கதாபாத்திரத்துக்கு உயிர் வடிவம் தந்து காத்திரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மஞ்சு வாரியர். அண்மையில் படத்தைப் பார்த்து ரசித்த கமல்ஹாசன், மஞ்சு வாரியரின் நடிப்பைப் பாராட்டியுள்ளார். கமலை சந்தித்த புகைப்படங்களைப் பகிர்ந்த மஞ்சு வாரியர் தனது சமூக ஊடக பக்கத்தில், அசுரன் படத்தைப் பார்த்தமைக்கும், நீங்கள் அதை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவித்ததற்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்.