மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு – கமல் கோரிக்கை
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்கள். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட சொல்லி நடக்கும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐன்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமரை விமர்சித்து பிரதமருக்கே கடிதம் எழுதுவது அரசியல் சாதத்துக்கு எதிரானது, விரோதமானது. தேசத்துரோக குற்றம் என்று பீகார் மாநிலம் முசாபர்பூரைச்சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதற்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது. இதுகுறித்து மக்கள் நீதிமய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கையில், பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பார்லிமென்டில் அவர் வெளியிட்ட அறிக்கைகள், பேசிய பேசிச்சுக்கள் அதை உறுதி செய்கின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா? எனது சகாக்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். எங்கள் உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூறி ஒரு குடிமகனாக கேட்டுக்கொள்கிறேன். என கமல் கோரியுள்ளார்.