Cine Bits
மணிரத்னம் படத்திலிருந்து விலகிய 96 கோவிந்த் !

மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவர் உதவியாளர் தனசேகரன் இயக்கும் படம், ’வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, மடோனா நடிக்கும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்படப் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் 96 புகழ் கோவிந்த் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். திடீரென்று படத்திலிருந்து அவர் விலகியதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக தமிழில் தள்ளிப் போகாதே.., மறுவார்த்தை பேசாதே, குறும்பா, கண்ணான கண்ணே உட்பட ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியிருப்பவர் சித் ஸ்ரீராம். இவர் அடுத்த படியாக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் முறையாக இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக சித்ஸ்ரீராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.