மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை அவரது காரிலேயே அழைத்துச் சென்றதால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் தன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம், வில்லிவாக்கத்தில் உள்ள தியேட்டர் அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த அதிரடி சோதனைகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அப்போது கசிந்தன.ரூ.1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத பல நூறு கோடிகள் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க – வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர, மதமாற்ற கும்பல்களுக்கு பின்புலத்தில் இருந்து ஜேப்பியார் குழுமம் இயங்கி வந்துள்ளதையும் அந்த சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக சினிமா பிரபலங்களை கொண்ட நெட்வொர்க், அரசியல்வாதிகளை கொண்ட நெட்வொர்க் போன்றவை இயங்கி வந்ததும் வருமான வரித்துறை கண்டு பிடித்தது. சென்னை லயோலா கல்லூரி இதற்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் கூறப்பட்டது. ஜேப்பியாரின் இரண்டாவது மகள் ரெஜினா இதனை செயல்படுத்தி வந்தது அந்த விசாரணையில் வெளியானது. சினிமா துறையை சேர்ந்த ஒரு பெரும் பட்டாளமே ரெஜினாவின் பின்னால் உள்ளதையும் அறிந்து கொண்டார்கள். இவர்களில் சினிமா துறையில் உள்ள விஜய், ஆர்யா, இயக்குனர்கள் அட்லி, எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபு சாலமன், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டணி போன்றவர்கள் முக்கியமாக இருந்து இயங்கி வருவதையும் வருமான வரித்துறை ஸ்மெல் செய்தது. இவர்களின் மூலமாக ஆண்டுதோறும் சினிமா கலைஞர்களுக்கு என்று சிறப்பு கிறிஸ்தவ ஆராதனை கூட்டம் என்ற பெயரில் வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களின் மத்தியில் பிரபலமான மதமாற்ற பாதிரியார்களைகொண்டு மூளைசலவையை அரங்கேற்றி வந்துள்ளனர். ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் பங்களாவில் சினிமா பிரபலங்களுக்காக அடிக்கடி பார்ட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. இதில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்,இயக்குனர் அட்லி, நடிகர் ஆர்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டதும் அப்போது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விசாரணையில் இன்னும் என்னென்ன பூதங்கள் கிளம்ப இருக்கிறதோ?