மதுபோதையில் கார் ஓட்டி விபத்து : நடிகர் சக்தி கைது!

இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி நினைத்தாலே இனிக்கும் மற்றும் பிக் பாஸ் முதல் சீஸனின் போட்டியாளராகவும் பங்கேற்றிருக்கிறார். இவர் மேலும் புதுப் படங்களில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் சக்தி தனது வீட்டிலிருந்து சொகுசு கார் ஒன்றில் புறப்பட்டார், வழியில் சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் தாறுமாறாக காரை ஓடிச்சென்று விபத்து ஏற்படுத்தியதாக  கைதுசெய்யப்பட்டார். இதனை அடுத்து பொதுமக்கள் அவரை மடிக்கிப்பிடித்து விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் சக்தி கைசெய்யப்பட்டு பின் ஜாமினில் விடுதலையானார்.