மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன் !
குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள், குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது என்கிற கருத்தினை மையமாகக் கொண்டு இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் 'குடிமகன்'. எதார்த்தமான நகைச்சுவையுடன், உணர்வுப் பூர்வமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் சத்தீஷ்வரன். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய்குமார் நடிக்கிறார். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஆவார். கதாநாயகியாக 'ஈரநிலம்' ஜெனிபர் நடிக்கிறார். இவர்களுடன் 'மது ஒழிப்பு போராளி' மாஸ்டர் ஆகாஷ், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரித்திருக்கிறார் சத்தீஷ்வரன்.