Cine Bits
மது குடிக்கும் காட்சியில் ஓவியா குடித்தது ஆப்பிள் ஜூஸ் தான்!
திரைக்கு வந்தது. அதில் மது குடிக்கும் காட்சி, லிப் டு லிப் முத்தம், படுக்கை அறை காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது கணேஷா மீண்டும் சந்திப்போம் புதிய படத்தில் நடித்திருக்கிறார் ஓவியா. ரத்திஷ் ஹேராட்டு இயக்கி உள்ளார். இதிலும் ஓவியா மது அருந்தும் காட்சி இடம்பெறுகிறது. இதுபற்றி அப்படத்தின் இயக்குனர் கூறியதாவது, நவநாகரீக பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறார் ஓவியா. கதாபாத்திரதுக்கு ஏற்ப மது அருந்தும் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் சம்மதித்தார். உண்மையிலேயே ஓவியா மது அருந்தவில்லை. ஆப்பிள் ஜூஸ்தான் குடித்து நடித்திருக்கிறார். இப்படமே சற்று வித்தியாசமான கதைக்களம் கொண்டது. 1994 களில் புல்லட் மோட்டார் பைக் மிகவும் பிரபலம். அந்த புல்லட் வண்டி இப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக இடம்பெறுகிறது இவ்வாறாக அவர் கூறினார்.