மநீம கட்சியில் இணைந்தார் கோவை சரளா!

நடிகை கோவை சரளா கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார்.ஏற்கனவே, மக்கள் நீதி மய்யத்தில் நடிகை ஸ்ரீப்ரியா, சினேகன் என சினிமா பிரபலங்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா இணைந்துள்ளார். கடந்த சில தேர்தல்களில் அதிமுகவிற்காகப் பிரச்சாரம் செய்த கோவை சரளா, சமீப காலமாகத் தனக்கு அரசியலை விட சினிமாவில் தான் ஆர்வம் என்று கூறி வந்தார். ஆனால் தற்போது யாரும் எதிர்ப்பாராத விதமாகக் கமல்ஹாசனின் கட்சியில் அவர் இணைத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு வரும் நிலையில், நடிகை கோவை சரளாவும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.