மனைவியை விட்டுப் பிரிந்தார் நடிகர் விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசப்பட்டது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறார். இதற்கிடையே, விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரைக் கடந்த  2011-ம் ஆண்டு 4 வருடங்கள் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு சமீபத்தில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், கடந்த ஒரு வருடமாக நானும் ரஜினியும் பிரிந்து இருந்தோம். தற்போது சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம்.