மன்சூர் அலிகான் கைது

நேற்று பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் பலரும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சீமானை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. இதனால் சீமான் தங்க வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு முன் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்து ஆர்பாட்டம் செய்தனர். மேலும் அங்கு நடிகர் மன்சூர் அலிகானும் வந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். சீமானை கைது செய்வதாக இருந்தால் தன்னையும் கைது செய்யுங்கள் என்று கூறினார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் உட்பட 18 பேர் மீது  ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.