மம்முட்டியின் உருக்கம்: எங்களை மன்னித்துவிடு மது…

கேரளாவில் ஆதிவாசி இளைஞர் ஒருவர் அரிசி திருடினார் என சந்தேகத்தின் பேரால் பொதுமக்கள் மற்றும் சில விஷமிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். இல்லையில்லை கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா முதல்வர் பிணராயி விஜயன் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதற்கு நடிகர் மம்முட்டி ” தயவுசெய்து மதுவை ஆதிவாசி என அழைக்காதீர்கள் அவனை என் இளைய சகோதரன் என்று சொல்வேன். அவனை கும்பலாக கொன்றுவிட்டீர்கள். அவனும் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு உரிமையுள்ள மனிதன் தானே. பசிக்காக திருடுபவனை நீங்கள் திருடன் என அழைக்க முடியாது அது சமூகத்தின் அவலம். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் சமூகம் எப்படி சக மனிதனுக்கு நியாயம் செய்யும் எங்களை மன்னித்துவிடு மது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.