மரணத்தை கண்டு அஞ்சுபவன் இல்லை : கமல்

நான் புரட்சியாளன்

நடிகர் கமல், டுவிட்டரில் அனைத்து விதமான ஊழல்களை பற்றி கூறாதது என் தவறு தான், நான் ஊழலுக்கு எதிரானவன் என, தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என நடிகர் கமல் விமர்சித்தார். அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பை கவனியுங்கள்; உங்களை நாங்கள் கவனிக்கிறோம் என டுவிட்டரில் பதிவு செய்தார். அடுத்தடுத்து, அவர் வெளியிட்டு வரும் கருத்து, அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.