மருதநாயகத்தில் நான் இயக்க வேறு ஒரு நடிகர் நடிப்பார் – கமல் அறிவிப்பு

1997-ம் ஆண்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கமல்ஹாசன் தொடங்கிய பிரமாண்டமாக படமாக தொடங்கபட்ட சரித்திர படம் மருதநாயகம். பாதிக்கு மேல் வளர்ந்த படம் பண பற்றாக்குறையால் கிடப்பில் போடப்பட்டது. தனது கனவு படமான மருதநாயகம் எப்படியாவது முடித்து திரையிடவேண்டுமென்பது கமலின் கனவாகவே போனது. ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படம் முடங்கி போய்யுள்ளது. இந்நிலையில் மருதநாயகம் பற்றி அண்மையில் கமலிடம் கேள்வியெழுப்பியபொழுது, படத்தை நிச்சயமாக திரையில் பார்ப்பீர்கள். ஆனால் அதில் கமல்ஹாசன் இல்லாமல் வேறு ஒரு நல்ல நடிகர் நடித்திருப்பார். இனி நான் கண்டு வைத்திருந்த கனவுகளை எல்லாம் நல்ல நடிகர்களை வைத்து நிறைவேற்றும் கம்பெனியாக ராஜ்கமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். எனது அரசியல் பயணம் பாதிக்காத வகையிலான படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி கமல் தனது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.