மருதநாயகம் விரைவில் தொடங்கும் – கமல்ஹாசன் அறிவிப்பு !

1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'. நிதி நெருக்கடி காரணமாக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அரசியலிலும், தனியார் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்பதாலும் நேரமின்மைக்காரணத்தாலும் மேலும் தலைவன் இருக்கிறான், இந்தியன் 2 படத்தில் நடிப்பதிலும் தற்சமயம் மருதநாயகம் படத்தை தள்ளிவைத்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் விரைவில் மருதநாயகத்தை படத்தை தொடங்குவேன் என அறிவித்துள்ளார்.