மருத்துவத்துறையில் நடைபெறும் ஊழலை சொல்லும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் !

அறிமுக இயக்குநர் பாஸ்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மெய்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகன் நிக்கி சுந்தரம் உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர். மருத்துவத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை கட்டணமாக மருத்துவமனைக்கு செலுத்தியதாகவும், மேலும் பல முறை மருத்துவர்களின் கட்டாயத்தின் பேரில் தேவையற்ற பரிசோதனைகளை செய்து கூடுதலாக மருத்துவச்செலவு செய்ய நேர்ந்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார். மருத்துவத்துறையில் மலிந்துள்ள இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்தார்.