மறுபடியும் இணையத்தளத்தில் லீக்கான தர்பார் படத்தின் புகைப்படங்கள் !

பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் லீக்காகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் அதிக குவாலிட்டியுடன் புதிய புகைப்படங்களை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஏகோபித்த வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது.