மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஜித் தந்த மரியாதை !

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு போனி கபூர் தயாரிப்பில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போனி கபூரின் மனைவி நடிகை ஸ்ரீ தேவியின் 2 ம் ஆண்டின் நினைவு தினம் கடந்த மாதம் 24-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள போனி கபூரின் வீட்டில் இன்று ஸ்ரீ தேவியின் நினைவு தினத்தையொட்டி திதி கொடுக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித் கலந்துகொண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்தினார். ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கிற்காக தான் அஜித் போனி கபூருக்கு இரண்டு படங்கள் பண்ணி தருவதாக சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.