மறைமுகமாக நடக்கும் அஜித் விஜய் பனிப்போர் !

அஜித்-விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்கிற்கு திருவிழா தான். அப்படியிருக்க அஜித்-விஜய் இருவரும் தங்கள் மார்கெட்டை படத்திற்கு படம் அதிகப்படுத்தி போவதை நாம் பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றோம். அந்த வகையில் நேற்று ஒரு பத்திரிகையாளர் கூறிய தகவலை நாம் மக்களிடம் செய்தியாக தெரிவித்து இருந்தோம், அதாவது அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் மாஸ் ரோலில் நடிக்கவில்லை என்றாலும் விஜய் படத்திற்கு நிகராக வியாபாரம் நடக்க முயற்சி செய்து வருகிறார்களாம். அதேபோல் தற்போது ஆடியோ ரைட்ஸும் விஜய் படத்திற்கு நிகராக விற்க முயற்சிகள் நடக்க, இவர்களின் பனிப்போர் மறைமுகமாக ஏதாவது ஒரு வழியில் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றது.