மற்ற நடிகைகளை காட்டிலும் நயன் தாரா மட்டும் ஏன் லேடி சூப்பர் ஸ்டார் !

ஆர்ஜே பாலாஜி கதை திரைக்கதை எழுதி இயக்கவுள்ள ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்க நயன்தாரா 40 நாட்கள் கால்சீட் கொடுத்து உள்ளதாகவும், இந்த 40 நாட்களும் அவர் அம்மனுக்கு விரதம் இருந்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தெலுங்கில் உருவான ’ஸ்ரீராமஜெயம்’ என்ற படத்தில் சீதை கேரக்டரில் நடித்த போதும் அவர் விரதமிருந்து பூஜையில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா ஒரு கேரக்டருக்காக இந்த அளவு மெனக்கிடுவதை அறிந்து கோலிவுட் திரையுலகில் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கதாபாத்திரத்தை கதாபாத்திரம் என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழும் நயன்தாராவின் அர்ப்பணிப்பு உழைப்பு தான் அவரை சூப்பர் ஸ்டாராக ஆக்கியுள்ளது என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.