மலேசியாவில் கடாரம் கொண்டான் வெளியாவதில் சிக்கல் !

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் விக்ரமை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் “கடாரம் கொண்டான். தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இப்படத்தினை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். முதலில் இப்படத்தில் கமலஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அரசியலில் ஈடுபட்ட காரணத்தால் கமல் நடிக்க முடியாமல் போகவே விக்ரம் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. அக்‌ஷரா ஹாசன், நாசர் மகன் அபி ஆகியோர் வெகு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். விக்ரம் ஸ்டைலிஷானகேரக்டரில் நடித்துள்ளார். தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 4.5 கோடிகளுக்கு மேல்வசூல் செய்திருப்பாதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் கடாரம் கொண்டான் மலேசியாவில் வெளியாக வில்லை. மலேசியா போலீஸை படத்தில் தவறாக சித்தரித்துள்ளதால்,Film Censorship Board of Malaysiaஇப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. இதனை பட விநியோகம் செய்யும் லோட்டஸ் ஃபைவ் ஸாடார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனால் மலேசியாவில் உள்ள தமிழ் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்