மலையாளத்தில் பெண் தாதா கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா

1980-களில் தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் ராதிகா. இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் ராதிகா நடிப்பில் 1993-ம் ஆண்டு ‘அர்த்தனா’ என்ற படம் வெளியானது. அதன்பிறகு மலையாளத்தில் அவர் நடிக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு திலீப் நடிப்பில் வெளியான ‘ராம்லீலா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு மலையாளத்தில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த படத்தில் பெண் தாதா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறார். பெண் தாதா மற்றும் அவரது நான்கு பிள்ளைகளைப் பற்றிய படமாக இது உருவாகியிருக்கிறது. அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் 'இட்டிமானி மேட் இன் சைனா' படத்திலும் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 34 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் படத்தில் ராதிகா நடிப்பது குறிப்பிடத்தக்கது.