மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு – நடிகர் சீனிவாசன் தகவல் !

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாரா. 2 வருடங்களுக்கு முன்புவரை ரூ.1.5 கோடிக்கு குறைவாகவே வாங்கி வந்தார். ஆனால் கடந்த வருடம் அவர் நடிப்பில் வந்த அனைத்து படங்களும் வசூல் குவித்தன. கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான படங்களும் லாபம் பார்த்தன. இதனால் சம்பளத்தை ரூ.3 கோடி, ரூ.4 கோடி என்று உயர்த்திய அவர் இப்போது ரூ.5 கோடி கேட்பதாக தகவல். நயன்தாரா மலையாள நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்குவதாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார். இவர் தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிகாரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.