மலையாள படத்திற்கு பாடல் எழுதுகிறார் தனுஷ் !

தமிழில் தான் நடித்த சில படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார் தனுஷ். முதல் முறையாக மலையாள படத்துக்கு அவர் பாடல் எழுதி அந்த பாடலை அவரே பாடியும் உள்ளார். நாதிர்ஷா இதற்கு இசையமைத்துள்ளார். பிருத்விராஜ், மடோனா செபஸ்டியன், ஐஸ்வர்யா லட்சுமி, பிரயாகா மார்ட்டின், மியா ஜார்ஜ் நடித்துள்ள படம் பிரதர்ஸ் டே. இந்த படத்தில் 4 ஹீரோயின்களுடன் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்த படத்துக்குதான் தனுஷ் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஏற்கனவே மலையாளத்தில் படம் தயாரித்துள்ள தனுஷ், இப்போது அங்கு பாடலாசிரியராகவும் மாறியுள்ளார்.