மலையாள ரீமேக்கில் தனுஷ் !

சமீபத்தில் மலையாளத்தில் பிரிதிவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஓய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ஓய்வுபெற்ற இளம் ராணுவ அதிகாரிக்கும் ஏற்படும் ஈகோ மோதல் எந்த அளவிற்கு உச்சம் தொடுகிறது என்பதை இந்த படத்தில் பரபரப்பாக காட்டியிருந்தார்கள். அதுவே இந்த படத்தின் வெற்றிக்கு வித்தாக அமைந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை ஆதிகாலம் கதிரேசன் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தாடி வைத்த தனுஷின் கதாபாத்திரம் பிரிதிவிராஜ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கும் என்றும் இன்னொரு போலீஸ் அதிகாரியான பிஜு மேனன் கிட்டத்தட்ட 56 வயதான கதாபாத்திரம் என்பதால் அதற்கு வேறு தோற்றமுள்ள நடிகர் தான் தேவை என்பதும் காரணமாக சொல்லப்படுகிறது.