மலையாள ஹீரோயினியான அர்த்தனா தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் 'முதுகாவ்'  என்ற படத்தில்  கதாநாயகியாக  அறிமுகமானவர் அர்த்தனா. ஆனால் இவருக்கு மலையாளத்தை விட  தமிழில்  சமுத்திரக்கனியின் “தொண்டன்”  படம் நல்ல அறிமுகத்தை தந்தது. அடுத்ததாக இவர் “செம”  என்ற படத்தில் ஜி.வி .பிரகஷ்  உடன் இணைந்து  நடித்த படம் வெளியாக இருக்கிறது. இவர் சூர்யா தயாரிப்பில், பாண்டிராஜ்  இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தில் மூன்று கதாநாயகிகளில்  ஒருவராக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே  பாண்டிராஜின்  தயாரிப்பில் வெளிவர உள்ள 'செம'  படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது அவரது இயக்கத்தில் கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.