மல்டி ஸ்டார்களை வைத்து படமெடுக்க தயாராகும் கெளதம் வாசுதேவ்மேனன் !

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் பிரச்னைகளை கடந்து அடுத்த வாரம் வெளிவரவுள்ளது. இதையடுத்து விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் வரவிருக்கிறது. இந்நிலையில் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் பாணியில் 4 முன்னணி ஹீரோக்களை வைத்து புதியபடம் இயக்க உள்ளாராம் கவுதம் மேனன். மாதவன், சிம்பு, மாரி 2 படத்தில் நடித்த டொவினோ, புனித் ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தை இயக்கிய கவுதம் மேனன் அப்படத்தின் 2ம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கவுதம்மேனன் கூறும்போது,’என்னை அறிந்தால் 2ம் பாகம் ஸ்கிரிப்ட் ரெடியாக உள்ளது. அஜீத் ஓகே சொன்னால் உடனே படப்பிடிப்பு தொடங்குவேன்’ என்றார்.