மல்யுத்த வீராங்கனையாகும் ஐஸ்வர்யா!

மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தை நிர்மல் குமார் இயக்க உள்ளார். சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார், அடுத்து சதுரங்க வேட்டை 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் அவர் ஒரு படம் இயக்க உள்ளார். இது மல்யுத்த போட்டியின் பின்னணியில் உருவாகும் குடும்ப கதை படம். மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இதற்காக அவர் மல்யுத்தம் கற்க இருக்கிறாராம். கிராமத்தை சேர்ந்த இளம்பெண், மல்யுத்த போட்டியில் சாதிக்க அவரது குடும்பம் எப்படி உதவுகிறது என்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. உதய் சங்கர், பிரதீப் ராவத், சஞ்சய் ஸ்வரூப் உள்பட பலர் நடிக்கிறார்கள்.