மழையில் நனைந்தபடி முத்தம் தர விருப்பம் – ராதிகா ஆப்தே !

எனக்கு 8 வயதாக இருக்கும்போது என் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு பையன் மீது எனக்கு அதிக ஆசை இருந்தது. அப்போது எனது வீட்டு வேலைக்கார பெண்ணுடன் அடிக்கடி சினிமாவுக்கு செல்வேன். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் காதல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி காதலிக்கு காதலன் முத்தமிடும் காட்சி வரும். அதுபோல் நானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்ட பையனுக்கு மழையில் நனைந்தபடி முத்தம் தர விரும்பினேன். ஆனால் அதை அவனிடம் சொல்வதற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. இப்போதுவரை மழையில் யாருக்கும் நான் முத்தம் தந்ததில்லை. அதுதான் எனக்கு நிறைவேறாத ஆசையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.