“மஹாவீர் கர்ணா” 32 மொழிகளில் வெளியீடு.

மலையாள  இயக்குனர் ஆர்.எஸ் விமல்  என்பர் மகாபாரத  கர்ணனை மையப்படுத்தி “மஹாவீர் கர்ணா” என்கிற படம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறார். இப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்த படம் முதலில் ஹிந்தியில் மட்டும் தயாராவதாக சொல்லப்பட்டது. ஆனால்  தற்போது தமிழும் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இப்படம் தயாரானதும்  32 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம். இப்படத்தை உலகளவில் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக  இந்த முயற்சி  மோற்கொள்ளப்பட இருக்கிறது.