மாதவன் இயக்கத்தில் ஷாருகான், சூர்யா நடிக்கும் புதிய படம் !

மாதவன் இயக்கி நடிக்கும் படம், ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இதில், சிறப்புத்  தோற்றத்தில் ஷாருக்கான், சூர்யா நடிக்கின்றனர். நம்பி நாராயணனை பேட்டி காண்பவர்களாக இந்தி பதிப்பில் ஷாருக்கானும், தமிழ் பதிப்பில் சூர்யாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன், உடனே சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். அவர் சந்தித்த சோதனைகள் மற்றும் சவால்களை மையமாக  வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் படம் உருவாகிறது. மாதவன் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.