மாதவன்: தோளில் அறுவை சிகிச்சை…..

நடிகர் மாதவன் “இறுதி சுற்று”, “விக்ரம் வேதா” படங்களின் மூலம் மீண்டும் தமிழில் தன்னுடைய மார்க்கெட்டை உயாத்திக் கொண்டார். தற்போது அவர் 'பிரீத்' என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து கடந்த மாதம் வெளியானது. அதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.இதனை அடுத்து கெளதம் மேனன் இயக்கும் “ஒன்றாக” படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அவருக்கு தோளில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனை தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.இதனால் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.