மாநாடு படம் கைவிடப்பட்டது – வெப்சீரிஸ் இயக்கப்போகிறார் வெங்கட் பிரபு !

வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் சென்னை-28, சரோஜா, மங்காத்தா என ஹிட் படங்களை கொடுத்தவர். கடைசியாக கூட சென்னை-28 இரண்டாம் பாகம் இவர் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்து சிம்புவுடன் மாநாடு என்ற படத்தில் கைக்கோர்ப்பதாக இருந்தது, தற்போது அந்த படம் சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாம். அந்த கேப்பில் வெங்கட்பிரபு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.